இளமைக்காலத்தை மீண்டும் நீங்கள் நினைவுபடுத்திப் பார்த்ததுண்டா ?
என் கேமராவுக்கு சிக்கிய படங்கள் உங்களது இளமை காலத்தை நினைவுபடுத்தும் என்று நம்புகின்றேன்.
உங்கள் இளமைக் காலத்தில் சகோதர சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக ஓடி ஆடி விளையாடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றதா?
கள்ளம் கபடம் இல்லாத அந்த வயதில் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?
இளமைக்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களை மீண்டும் நீங்கள் நினைவுபடுத்திப் பார்த்ததுண்டா ?
பெரியவர் ஆனதும் பெற்றோரை விட்டு பிரிந்து ஒவ்வொருவரும் தனி வாழ்க்கை அமைத்துக்கொண்ட பின்னர் வாழ்க்கைப் பாதையே மாறி விட்டதல்லவா!
இந்திர மயமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் வாழ்க்கையை வாழ்வதற்கே போராட வேண்டியதாகிவிட்டது. பணம் தான் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கின்றது.
சுயநலம் என்ற நோய் தொற்றிக் கொள்கின்றது. இதற்கு விதிவிலக்காகவும் இந்த உலகில் மனிதர்கள் வாழத்தான் செய்கின்றார்கள். வியாபார உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வியாபார முதலைகளே நாம் எப்படி வாழவேண்டும் என தீர்மானிக்கின்றன. இதற்குள்ளே தான் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தேடிக்கொண்டே இருக்கின்றோம்.
இணையப் பாவனை தனி மனித சுதந்திரத்தை பறித்து விட்டது. ஃபேஸ்புக் , யு ரியுப், வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் ஆகியவற்றுக்கும் மூழ்கி விட்டோம். மகிழ்ச்சியாக மனம்விட்டு கதைப்பதற்குப் பதிலாக இணையத்தில் ஸ்டேட்டஸ் போட்டு கொண்டிருக்கின்றோம்.
மனநோயாளிகள் தமக்குள் தாமே கதைப்பது போன்று எமக்குள்ளே கதைக்கின்றோம். எமக்குள்ளே சிரிக்கின்றோம். எம்மை அறியாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை இவற்றுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றோம்.
குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் இணையத்துக்குள் மூழ்கிவிட்டனர். சிறுவயது மகிழ்ச்சியை தொலைத்து விட்டனர். சிறியவர் முதல் பெரியவர் வரை இணையத்திற்கு அடிமையாகிவிட்டனர்.
சிறுவயதில் ஓடி விளையாடி மகிழ்ந்த நாட்கள் மீண்டும் வருமா? இந்த படங்களைப் பாருங்கள் என் கேமராவுக்குள் சிக்கிய படங்கள் இவை.
இரண்டு நாய்க் குட்டிகள் மகிழ்ச்சியாக எப்படி விளையாடி உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று பாருங்கள். இதனைப் பார்க்கும்போது நீங்கள் தொலைத்த நாட்கள் உங்களுக்கு நிச்சயம் நினைவுக்கு வரும்.
Comments
Post a Comment