மாலை வேளை என் வீட்டிற்கு வந்தது, தம்பி அல்ல தும்பி
இன்று மாலைவேளை, வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது, என் தலைக்கு மேலாகத் தும்பி (DRAGONFLY)
ஒன்று வந்து வீட்டின் சுவரில் அமர்ந்து கொண்டது. நான், பல நிறங்களில் தும்பிகளை எங்கள் ஊரில் பார்த்திருக்கின்றேன். சிறுவயதில் பிடித்தும் இருக்கின்றேன். ஆனால்
இலங்கைத் தலைநகர், கொழும்பில் நான் பார்த்த, இந்தத் தும்பி, சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. தும்பியின் இறக்கைகளின், ஒரு பகுதி மட்டும் கறுப்பாக இருந்தது.
நான் இவ்வாறான தும்பிகளை, எங்கள் ஊரிலும் கண்டதில்லை. உடனே கமராவுக்குள் பதிவு செய்து கொண்டேன். நீங்கள் இவ்வாறான தும்பிக ளைக் கண்டிருக்கின்றீர்களா?
தும்பி இனமானது, மிகவும் பழமை
வாய்ந்த இனமாகும்.
தும்பியும் பூச்சி இனத்தை
சேர்ந்த உயிரியாகும்.
தும்பிக்களுக்கு இரண்டு சோடி இறக்கைகள் உண்டு.
தும்பிகள், தங்களது
முன் இரண்டு இறக்கைகளை யும், பின்
இரண்டு இறக்கைகளையும்
வெவ்வேறு வேகத்திலும்
அசைக்க முடியும்.
இவை, எந்தக்
கோணத்திலும் தங்களை
நிலை நிறுத்திக் கொள்ளும், இயல்பைக்
கொண்டுள்ளன. இந்தச் சிறப்பமைப்பின் காரணமாகவே, தும்பிகளால் உலங்கு வானூர்திகளைப் போல ஒரே இடத்தில் நின்றபடி பறக்க முடிகின்றது.
இவற்றின் கண்கள்
மற்றைய பூச்சிகளை
விட அளவில்
பெரியவையாக உள்ளன.
மிகத் துல்லியமான
பார்வைத் திறனைப்
பெற்றுள்ளன. தும்பிக ளின்
எதிரி பறவைகளாகும்.
பறவைகளே தும்பிகளைப்
பிடித்து உண்ணு கின்றன.
தும்பிகளின் வாழ்நாட்கள்
மிகவும் குறைவாகும்.
தும்பிகள் முதிர் பருவத்தை அடைந்ததும் அதிலிருந்து நான்கு முதல் அதிக பட்சம் ஏழு வாரங்கள் வரை உயிர் வாழ்கின்றன.
தலைநகர்
கொழும்பில் அருமை
பெருமையாகத் தான்
தும்பிகளைப் பார்க்க
முடிகின்றது. முன்பெல்லாம் சிட்டுக் குருவிகளை எங்கள் வீட்டு முற்றத்தில் காணலாம். என் பிள்ளைகள் சனி ஞாயிறு தினங்களில் சிட்டுக் குருவிகளுக்கு அரிசியை சிறிய கிண்ணத்தில் வைப்பார்கள். சிட்டுக் குருவிகளைக் கண்டு விட்டால் அவர்கள் தங்களையே மறந்து விடுவார்கள். இப்போது சிட்டுக் குருவிகள் ஏன் வருவதில்லை என்று கேள்விக்கணை தொடுக்கின்றார்கள்.
செல்பேசியின் வருகை சிட்டுக் குருவிகள் அழிவின் விளிம்பிற்கு வருவதற்கு காரணமாகிவிட்டது என்று சொன்னால் நம்ப மறுக்கின்றார்கள். நீங்களாவது நம்புகின்றீர்களா?
.
தும்பிகள் பற்றிய வீடியோவைப் பாருங்கள்.
.
Comments
Post a Comment