ஓடி வாருங்கள்!
நான் எழுதிய சிறுவர் பாடல் - 2
ஓடி வாருங்கள்!
பிள்ளைகளே! பிள்ளைகளே!
ஓடி வாருங்கள்!
ஓடி வாருங்கள்!
பிரியமுடன் கற்றிடலாம்
ஓடி வாருங்கள்!
குட்டிக்கதைகள் கேட்டிடலாம்
ஓடி வாருங்கள்!
குதூகலமாய் பேசிடலாம்
ஓடி வாருங்கள்!
விளையாடி மகிழ்ந்திடலாம்
ஓடி வாருங்கள்!
விந்தைகள் செய்திடலாம்
ஓடி வாருங்கள்!
சித்திரங்கள் வரைந்திடலாம்
ஓடி வாருங்கள்!
சேர்ந்து பாடி ஆடிடலாம்
ஓடி வாருங்கள்!
நாடகங்கள் நடித்திடலாம்
ஓடி வாருங்கள்!
நற்பண்புகளை வளர்த்திடலாம்
ஓடி வாருங்கள்!
ஒற்றுமையாய்ச் செயற்படலாம்
ஓடி வாருங்கள்!
ஓரணியில் இணைந்திடலாம்
ஓடி வாருங்கள்!
சாதனைகள் புரிந்திடலாம்
ஓடி வாருங்கள்!
சரித்திரம் படைத்திடலாம்
ஓடி வாருங்கள்!
Comments
Post a Comment