Tuesday, May 18, 2021

விசித்திரமான உலகில் வாழ்கின்றோமா?



இயற்கை  எங்களைப் பார்த்துச் சிரிக்கிறது. இன்று நீ படும் இன்னல்களுக்குக் காரணம் என்னை நீ நேசிக்காததும் என்னை நீ பாதுகாக்கத் தவறியதும் தான் என்று சொல்லாமல் சொல்கின்றது.

பூங்கன்றுகளை வளர்ப்பதற்குக் கூட செயற்கை உரங்களையே நம்பிக் கொண்டிருக்கின்றோம். இயற்கை உரங்களை பயன்படுத்த நாம் விரும்புவதில்லை. இயற்கை உரங்களை இலகுவாக வீட்டிலேயே தயாரிக்கவும் நமக்கு தெரியாது. செயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகளைப் பயிரிடுகின்றோம். செயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்கின்றோம். விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறன. குடிநீர் நஞ்சாகி கொண்டிருக்கிறது. போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை குடிப்பதை நாகரீகம் ஆக்கிவிட்டோம்நாமே பணம் கொடுத்து நோய்களை வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

வீடுகளில் மின்சார விசிறிகள் இருப்பதால்  அந்தக் காற்றுக்கு அடிமையாகி விட்டோம். அன்றைய காலங்களில் விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு கடற்கரைக்கு காற்று வாங்க செல்வார்கள். சுத்தமான காற்றை சுவாசிப்பதால் இதயம் பலம் பெறும் என்று நம்பினார்கள். கடற் காற்றை சுவாசிப்பதால் நோய்கள் நம்மை விட்டு அகலும் என்று திடமாக நம்பினார்கள்.கடற்காற்று சுத்தமானது என்பதால்தான் விடுமுறை நாட்களில் கடற்கரையை நோக்கி சென்றார்கள்.


இன்று ஏன் கடற்கரைக்கு செல்கிறார்கள். தெரியவில்லை. கடற்கரை கூட இன்று அசுத்தமாகி விட்டது. கடற்கரையும் எம்மைப் பார்த்து அழுது கொண்டுதான் இருக்கின்றது.

மன அமைதிக்காகப் பணம் கொடுத்து வியாபாரிகள் நடத்தும் தியான வகுப்புகளுக்குச் செல்கின்றோம். இன்று தியான வகுப்புகளுக்கு செல்வது கூட கௌரவம் ஆகிவிட்டது.

அதிகாலையில் வீட்டின் ஜன்னலை திறந்து இயற்கைச் சூழலைப் பார்த்தாலே மனதுக்கு புத்துணர்வு கிடைக்கும் சோர்வு எம்மை விட்டு அகன்று விடும்.

அப்துல் கலாம் அவர்கள் மரங்களை நாட்டுங்கள் என்றார். மரங்களை நாட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்தினார். தனக்குப் பின்னர் இந்த முயற்சி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ல் கருத்துக்களை விதைக்கும் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்அவரும் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சரியாக செய்து வந்தார்அவரும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டார். அவர் மரம் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 கொறோணாவுக்கான தடுப்பூசியைப் போடுங்கள். அதுதான் எங்களுக்கு பாதுகாப்பு என்று சொன்னார். தானும் அந்த ஊசியைப் ஏற்றி மக்களின் பயத்தை போக்கினார். தடுப்பூசி தான் கொறோனாவிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி  என்று உரத்துச் சொன்னார். அன்று அவர் சொன்னபோது அவரது வார்த்தைகளை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. பலர் தடுப்பூசி போடப் பயந்தார்கள். சிலர் உயிர் பிரிந்து விடுமோ என்ற பயத்தில் தடுப்பூசி போட த் தயங்கினார்கள். இன்னும் சிலர் நல்ல தடுப்பூசி வரட்டும் என்று  காத்திருந்தார்கள். கொறோணாவின் இரண்டாவது அலை வந்ததும் எந்தத் தடுப்பூசி ஆக இருந்தாலும் பரவாயில்லை என்று தடுப்பூசியை தேடி அலைகிறார்கள்.

விசித்திரமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுடைய சின்னஞ் சிறார்களையாவது  சுயமாகச் சிந்திக்கப் பழகுவோம். இயற்கையை நேசிக்கப் பழகுவோம். இயற்கையை இரசிக்கப் பழகுவோம். இயற்கையைப் பாதுகாக்கப் பழகுவோம். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்.அதை நாமே நீரூற்றி வளர்ப்போம் என்று கூறிப் பிள்ளைகளை வளர்ப்போம்.அவர்கள் இயற்கையை மட்டுமல்ல நாங்கள் முதுமை அடைந்ததும் எங்களையும் பாதுகாப்பார்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment

பூக்கள் என்றாலே கொள்ளை அழகுதான்!

பூக்கள் என்றாலே கொள்ளைஅழகுதான் . சுற்றுச்சூழலை சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன . நோய் தீர்க்க...