பூக்கள் என்றாலே கொள்ளை அழகுதான்!
பூக்கள் என்றாலே

அன்று முதல் இன்று வரை மனிதர்களின் வாழ்வுடன் பூக்கள் பின்னிப் பிணைந்துள்ளன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பூக்கள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாங்கள் வீட்டிலும் மருத்துவ குணமுள்ள பூ செடிகளை வளர்க்கலாம். கமத்தொழில் திணைக்களத்திடம் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம். பூக்களின் முக்கியத்துவம் பற்றி எங்களுடைய பிள்ளைகளுக்குப் புரியும் வகையில் எடுத்துக் கூறுவது காலத்தின் தேவையாகும்.
பிள்ளைகள் வீட்டிலிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பூஞ் செடிகளை வளர்க்கப் பிள்ளைகளுக்கு வழி காட்டுங்கள். அவர்களே பூங் கன்றுகளை நாட்டு நீரூற்றி வளர்க்கும்போது; அந்த செடிகளில் பூ பூக்கும் போது சிறுவர்களின் மனதில் அளவில்லாத ஆனந்தம் ஏற்படும். அந்த ஆனந்தம் பிள்ளையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
சிறுவர்கள் பாடி மகிழ்வதற்காக “மலர்கள்” என்ற தலைப்பில் சிறுவர் பாடல் ஒன்றை இங்கு பதிவிடுகின்றேன். படங்களுடன் பாடல் வரிகளையும் இணைத்துள்ளேன். வீட்டில். இருக்கும் சிறுவர்கள் பாடலைப் பாடி மகிழ உதவுங்கள்.
மலர்கள்
சின்னச் சின்ன மலர்கள்
சிறிய வெள்ளை மலர்கள்
கண்ணைக் கவரும் மலர்கள்
களிப்பைத் தரும் மலர்கள்
வண்ண வண்ண மலர்கள்
வண்டுகள் நாடும் மலர்கள்
கொத்துக் கொத்து மலர்கள்
கொள்ளை அழகு மலர்கள்
மஞ்சள் போன்ற மலர்கள்
மனதைக் கவரும் மலர்கள்
அன்பைத் தரும் மலர்கள்
அழகிய சிவப்பு மலர்கள்
ஊதா நிற மலர்கள்
ஊரில் உள்ள மலர்கள்
வாசம் வீசும் மலர்கள்
வசந்த கால மலர்கள்
வி.என்.எஸ். உதயசந்திரன்
சிறுவயதிலிருந்தே பூஞ்செடிகளை நாட்டி நீரூற்றப் பழக்குங்கள். பூஞ்செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கும் போது சுற்றுப்புறச் சூழலே அழகு பெறுகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்
Comments
Post a Comment