குரங்குகளும் இரசித்து ருசித்து உண்ணுமா?

 எனது கேமராவில் சிக்கிய அருமையான படங்களை                    உங்களோடு  பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 கொறோனா  ஆரம்பமாவதற்கு முன்பு மட்டக்களப்பு நகருக்கு அருகாமையில் உள்ள ஆரையம்பதிக்குச்  சென்றிருந்தேன்.


எனது  நண்பரின்  வீட்டில்  தங்கியிருந்தபோது  பொழுதில்   அவரது வீட்டின் முற்றத்தில் உள்ள  மாமரத்தில் திடீரென   குரங்குகள்   கூட்டமாக வந்து அங்கும் இங்கும்  பாய்ந்து மா மரத்தில்  உள்ள   காய்கள் பிஞ்சுகள், பழங்கள் என்று   பார்க்காமல்  நாசம்  செய்யத்   தொடங்கின.

குரங்குகள் கூட்டமாக வந்தாலே  மா மரங்களில் உள்ள  மாங்காய்கள்  பழங்கள், பிஞ்சுகள் ஆகியவற்றை மட்டுமில்லாமல் வீட்டுக்  கூரைகளிலுள்ள ஓடுகளையும் சேதமாக்கி விட்டுத் தான் அவை   அவ்விடத்தை   விட்டு நகர்ந்து செல்லும்.

இந்தக் குழப்பகரமான சூழ்நிலையில்குரங்கு ஒன்று மா மரத்தில் அமர்ந்து மாம்பழத்தை ருசித்து ருசித்து உண்ணும்  காட்சியைப்    பய பீதியோடு எனது கமரா மூலம் படம் பிடித்துக் கொண்டேன்.










இந்த அரிய காட்சிகள் சிறுவர் முதல் பெரியவர்கள் வியந்து பார்த்து இரசிக்கக் கூடியவை. இந்தக் காட்சிகளை நீங்களும் பார்த்து  இரசிப்பதோடு உங்கள் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கும் காண்பித்து       அவர்கள்   தங்களது கற்பனை ஆற்றலையும் இரசனை உணர்வையும் சிறு வயதில் இருந்தே வளர்த்துக் கொள்ளத் துணை புரியுங்கள்.


இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் இந்தக் காட்சிகளைப்  பார்க்கும் ஒவ்வொருவருக்கும் சிறு அமைதியைத் தரும் என்று நம்புகின்றேன். 

Comments

Popular posts from this blog

மாலை வேளை என் வீட்டிற்கு வந்தது, தம்பி அல்ல தும்பி

தரமான கற்பித்தலுக்கான செயல்நிலை ஆய்வு Qualitative Learning Action Research