சிறுவர் பாடல் - பட்டம்
சிறுவர் பாடல் - 3
பட்டம்
பட்டம் நல்ல பட்டமாம்
பறந்து செல்லும் பட்டமாம்
துள்ளிக் குதிக்கும் பட்டமாம்
தூரச் செல்லும் பட்டமாம்
வால் உள்ள பட்டமாம்
வானில் மிதக்கும் பட்டமாம்
கண்ணைக் கவரும் பட்டமாம்
காற்றில் ஆடும் பட்டமாம்
சின்னஞ் சிறிய பட்டமாம்
சிறுவர் விரும்பும் பட்டமாம்
வி .என். எஸ் .உதயசந்திரன்
Comments
Post a Comment