யார் இவர்?
நான் எழுதிய சிறுவர் பாடல் - 1
யார் இவர்?
சுற்றிச் சுற்றி வந்தாராம்
சுழன்று சுற்றி வந்தாராம்
அம்மா அருகில் சென்றாராம்
அங்கும் இங்கும் பார்த்தாராம்
அப்பா அருகில் சென்றாராம்
ஆனந்தத்தோடு குதித்தாராம்
தம்பி அருகில் சென்றாராம்
தாவித் தாவிப் பாய்ந்தாராம்
தங்கை அருகில் சென்றாராம்
தயக்கத்தோடு முகர்ந்தாராம்
பதுங்கும் பூனையைக் கண்டாராம்
பாய்ந்து ஓடிச் சென்றாராம்
வாட்டத்தோடு வந்தாராம்
வாலை ஆட்டி நின்றாராம்
வாலை ஆட்டி நின்றாராம்
வி.என்.எஸ். உதயசந்திரன்
Comments
Post a Comment