மாலை வேளை என் வீட்டிற்கு வந்தது, தம்பி அல்ல தும்பி

இன்று மாலை வேளை , வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது , என் தலைக்கு மேலாக த் தும்பி (DRAGONFLY) ஒன்று வந்து வீட்டின் சுவரில் அமர்ந்து கொண்டது . நான் , பல நிறங்களில் தும்பிகளை எங்கள் ஊரில் பார்த்திருக்கின்றேன் . சிறுவயதில் பிடித்தும் இருக்கின்றேன் . ஆனால் இலங்கைத் தலைநகர் , கொழும்பில் நான் பார்த்த, இந்தத் தும்பி , சற்று வித்தியாசமாகத் தெரிந்தது . தும்பியின் இறக்கைகளின் , ஒரு பகுதி மட்டும் கறுப்பாக இருந்தது .