Pages

எனது இணையத்தளத்திற்கு வருகை தந்த உங்கள்அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள். மீண்டும் வருக. www.udayasanthiran.blogspot.com





Sunday, March 19, 2017

உணவு உண்ணும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வழிமுறைகள், விதிமுறைகள்



உணவு உண்ணும் போது பின்பற்ற வேண்டிய நாகரிகமான நடைமுறைகள், வழிமுறைகள், விதிமுறைகள் உள்ளன. நாம் அவற்றைப் பொது இடங்களில் பின்பற்றத் தவறினால் கௌரவத்தை இழக்க நேரிடும். மற்றவர்கள் எம்மை மதிக்கமாட்டார்கள்.

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் சேர்ந்து சாப்பிடும்போது சில நாகரிக முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதனை ஆங்கிலத்தில் 'ரேபிள் மேனர்ஸ்' என்று அழைக்கிறார்கள். வெளிநாட்டு பாரம்பரியத்தில் மட்டுமின்றி எமது பாரம்பரியத்திலும் உண்ணும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வழிமுறைகள், விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

உண்ணும் போது போது அவசர அவசரமாக உண்ணக்கூடாது. மெதுவாக, நிதானமாக உண்ண வேண்டும். உண்ண போது வாயை மூடிக்கொண்டு உண்ண வேண்டும். வாயை திறந்து வைத்துக்கொண்டு உணவை மெல்லக்கூடாது.

உண்ணும் போது உணவுப்பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டு உண்ண வேண்டும். உணவுகள் வாயில் சிந்தி சிதறும் வண்ணம் உண்ணக்கூடாது.

ஓட்டல்களில் உண்ணும் போது உணவு பரிமாறுபவரை அழைக்கும் போது கையில் உணவு பொருட்களை வைத்துக்கொண்டு அழைக்கக் கூடாது. அதுபோல கையில் உணவுக்கரண்டி அல்லது நாப்கின் போன்றவற்றை வைத்துக்கொண்டு உணவு பரிமாறுபவரை அழைக்கக் கூடாது.

மேசையில் உள்ள கரண்டி போன்ற உணவு எடுத்து உண்ணும் உபகரணங்களை ஒரு முறை கையில் எடுத்து பயன்படுத்திவிட்டால் அதை மீண்டும் மேசையில் வைக்கக் கூடாது. உணவுத் தட்டு அல்லது அருகில் உள்ள தட்டில் தான் வைக்க வேண்டும்.

உண்ணும் மேசையில் அமர்ந்திருக்கும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகு, உடலை வளைத்துக்கொண்டு மேசையில் அமரக்கூடாது.

விருந்துக்கு சென்ற இடத்தில் உணவு வகைகள் உங்களுக்கு பிடிக்காமல் இருந்தால் அதை வெளிக்காட்டக்கூடாது. உணவுகள் ருசியாக இல்லை என்று விருந்தளிப்பவர்களிடம் நேரடியாக கூறக்கூடாது. உண்ணும் போது குறைந்த அளவு உணவுகளை உண்ணுவதே சிறந்தது.

உண்ணும் போது உங்களுக்கு தேவையான அளவு உணவுகளை மட்டுமே எடுத்து உண்ணுங்கள். அளவுக்கு அதிகமாக உணவுகளை தட்டில் எடுத்துக்கொண்ட பின்னர் உண்ண முடியாமல் குப்பையில் கொட்டக்கூடாது.

உண்ணும் போது உணவு இருக்கும் தட்டில் உள்ள உணவுகளை முறையாக எடுத்து உண்ணுங்கள். முறையற்ற வகையில் உங்கள் உணவுத்தட்டு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உண்ணும் போது வீணாகும் உணவுகளை அதற்கு என்று உள்ள தட்டில் வைக்க வேண்டும். உணவு உண்ணும் தட்டிலேயே அவற்றை வைக்கக் கூடாது.

உண்ணும் போது ஏப்பம் அல்லது தும்மல் போன்றவை வந்தால் அதை நாசுக்காக கையாள வேண்டும். அருகில் இருப்பவர்களுக்கு தொந்தரவு தராத வகையில் நடந்து கொள்ளவேண்டும். மேலும் இந்த செயலுக்காக அருகில் இருப்பவர்களிடம் 'மன்னிக்க வேண்டும்' என்று சொல்வது நல்ல பழக்கமாகும்.

உண்ணும் போது முள்ளுக்கரண்டி, கத்தி, ஸ்பூன் போன்ற வற்றை பயன்படுத்துவதாக இருந்தால் முதலில் உணவை சிறிய துண்டாக வெட்டிக்கொண்டு அதன் பிறகு உண்ண வேண்டும். பெரிய துண்டுகளாக உணவுகளை எடுத்து வாயில் திணிக்கக் கூடாது.

உண்ணும் போது உங்கள் கைப்பை,பேர்ஸ், மொபைல் போன் போன்றவற்றை மேசையில் வைக்கக் கூடாது.

ஒவ்வொரு உணவுக்கும் ஏற்ப கரண்டி,முள்ளுக்கரண்டி, கத்தி போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதற்கு ஏற்ப அவற்றை பயன்படுத்த வேண்டும்.

நன்றி: :மாலைமலர்

Download As PDF

2 comments:

Sathiyaseelan Mohan said...

ஆசிரியரே! நீங்கள் கூறிய உணவு பற்றிய விளக்கம் மிகவும் இலகுவாக என்னால் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

மற்றும் இதில் கூறிய நடைமுறைகள், விதிமுறைகளில் நான் 100 வீதம் பின்பற்ற விட்டாலும் நான் 80 வீதம் பின்பற்றுகிறேன். மீதம் இருக்கும் 20 வீதத்தையும் இன்றிலிருந்து பின்பற்றுகின்றேன். மிக்க நன்றி ஆசிரியரே.....



Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான வழிகாட்டல்

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

மின்னஞ்சல் ஊடாகக் கருத்துத் தெரிவிக்க

Name:
Email:
Comment: